அன்னண பாத்தியா.. எந்த மொழி பாடல் தெரியுமா?ஷாக் ஆகிடுவீங்க!
அன்னண பாத்தியா.. எந்த மொழி பாடல் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாடல்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வினோத வீடியோக்களும் , பாடல்களும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் சமீப காலமாக என்ன மொழியென்றே தெரியாத பாடல்களும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதே போல், ஆங்கிலம் இந்தி, தெலுங்கு, மலையாளம் என அர்த்தம் புரியாவிட்டாலும் இசைக்காக ஏராளமான பிற மொழி பாடல்கள் கொண்டாடப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், திடீரென ஆனா அனா பதியே ரிங்டோன் எனத் தொடங்கும் ஒரு பாடல் இணையத்தில் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தற்போது, ரீல்ஸ்களாகவும் வலம் வர தொடங்கி உள்ளது.
இது தாய்லாந்து பாடல் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் வரிகள் புரியவில்லை என்றாலும்,அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.