பெண் ரிப்போர்டர் கேட்ட கேள்வி..கோபத்தில் அடித்த மூத்த அரசியல்வாதி - சர்ச்சை வீடியோ!

Viral Video Thailand
By Swetha Aug 24, 2024 08:10 AM GMT
Report

பெண் நிருபரை முன்னாள் ராணுவத் தளபதி தலையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அரசியல்வாதி

தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் பிரவிட் வாங்சுவான். இவர் பலத் பிரசாரத் என்ற கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர்,

பெண் ரிப்போர்டர் கேட்ட கேள்வி..கோபத்தில் அடித்த மூத்த அரசியல்வாதி - சர்ச்சை வீடியோ! | Thailand Politician Hits A Lady Reporter Viral

அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பிறகு அங்கிருந்து கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.

சர்ச்சை வீடியோ

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் போலீசில் புகார் அளித்தார்.

பெண் ரிப்போர்டர் கேட்ட கேள்வி..கோபத்தில் அடித்த மூத்த அரசியல்வாதி - சர்ச்சை வீடியோ! | Thailand Politician Hits A Lady Reporter Viral

இதையடுத்து, இந்த சர்ச்சை பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பெண் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.