காதலனை பழிவாங்க முன்னாள் காதலி செய்த கோர செயல்! நீங்களே பாருங்க இந்த கொடுமைய!
தாய்லாந்தில் தன் காதலன் பிரிந்து சென்ற கோபத்தில் காதலனின் 23 லட்ச ரூபாய் பைக்கை முன்னாள் காதலி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக காதலர்கள் பிரிந்துவிட்டால் அந்த பிரிவை தாங்க முடியாமல், பிரிந்து சென்றவரை பழிவாங்க மற்றவர் முயற்சிப்பது வழக்கம். அந்த வகையில், தாய்லாந்தை சேர்ந்த 36 வயதாகும் பெண் கனோக்கும், அதே பகுதியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவரும் காதலித்து வந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் திருமணம் செய்யாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்குமிடையே சற்று மனகசப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கனோக்கிடமிருந்து அவரது காதலர் பிரிந்து சென்று விட்டார். இந்த பிரிவை கனோக்கால் தாங்கவே முடியவில்லை.
இதற்கிடையில் கனோக்கின் காதலர் இவர்கள் காதலித்த போது அவர் பரிசளித்த பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாயாகும்.
இந்நிலையில் இந்த பைக்கை அவர் பயன்படுத்தகூடாது என கனோக் முடிவெடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு நாள் கனோக்கின் காதலர் பள்ளிக்கு சென்றிருந்த போது அவரது பைக் நிறுத்தப்பட்டிருக்கும் பார்க்கிங்கிற்கு வந்த கனோக், தான் கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பைக்கின் மீது ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இதனால் அந்த பைக் மட்டுமின்றி பக்கத்தில் நின்ற பைக்களுக்கும் தீ பரவி மளமளவென பற்றி எரிந்தது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதை பார்த்த போலீசார் கனோக்கை கைது செய்து விசாரித்த போது தான் தன் முன்னாள் காதலனை பழிவாங்க இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். நல்லவேளையாக அந்த பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை கொரோனா காரணமாக மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வருவதால் பெரும் விபரீதம் தடுக்கப்பட்டது.