தைப்பூச நாளில் விரதம் இருக்கீங்களா? முருகனுக்கு கட்டாயம் இந்த உணவு படைக்க வேண்டும்!
தைப்பூச நாளில் முருகனுக்கு கட்டாயம் படைக்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தைப்பூசம்
தை மாதத்தில் பொங்கல் பண்டிகை எவ்வளவு சிறப்பு வாய்த்ததோ அதுபோல தைப்பூசம் திருவிழாவும் முருகப்பெருமானுக்குச் சிறப்பு வாய்தது. தைப்பூசத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தைப் பக்தர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு தைப்பூசம் வரும் பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட பல முருகன் கோயில்களுக்குப் பக்தர்கள் பாத யாத்திரையாகச் செல்வார்கள்.
தைப்பூசத்திற்காக 48 நாள் அல்லது 21 விரதத்தைக் கடைப்பிடிக்கலாம் அல்லது தைப்பூச நாளான அன்று முழு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த நாளில் பூஜையறையைக் கண்டிப்பாக முருகனுக்கான சர்க்கரைப் பொங்கல், கருப்பு கொண்டைக் கடலை வைத்துப் படைக்க வேண்டும்.
படைக்க வேண்டிய உணவுகள்
மேலும் விரதம் இருப்பவர்கள் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தைக் குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும்.
மறுநாள் காலை நீராடி, கோவிலுக்குச் செல்லமுடியவில்லை என்றால் வீட்டிலேயேதிருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.