தாய் மாமன் தங்க மோதிர திட்டம்.., வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் பொருந்துமா?

TVK
By Yashini Oct 05, 2026 05:40 AM GMT
Report

வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தங்க மோதிரம் திட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி என்பவருக்கு மைசூரை சேர்ந்தவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் உமா மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்.., வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் பொருந்துமா? | Thai Maman Gold Ring About Health Department

இதையடுத்து, தமிழக அரசின் "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்தின் கீழ் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்க கடந்த 1ஆம் தேதி டோக்கன் வழங்கப்பட்டது.

ஆனால், உமா மகேஸ்வரி சமர்ப்பித்த ஆதார் அட்டையில் மைசூர் முகவரி இருந்ததால், அவரது விவரங்களை கணினியில் பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்படவில்லை.

பொது சுகாதாரத்துறை விளக்கம்

அதில், உமா மகேஸ்வரியின் ஆவணங்களின்படி அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசவத்திற்காக காரைக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த அவர், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அவருக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், பிரசவத்திற்குப் பிறகும் தேவையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், ஆவணங்களின் அடிப்படையில் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அவரால் பயனடைய முடியாது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.