பல ஆண்டுகளுக்கு ஒருமுறை; வெள்ளிக்கிழமையில் தை அமாவசை - என்னென்ன சிறப்புகள் தெரியுமா?
அமாவாசை தினத்தில் எப்படி பூஜை செய்து படையல் வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
அமாவாசை
இந்துக்களின் புன்னிய ஸ்தலங்களில் தை அமாவாசை முக்கிய பங்கு வகிக்கிறது. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகிற அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு புனித ஸ்தலங்களில் தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று தை அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பதற்காக திரண்டனர். மேலும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம், தாமிரபரணி, குற்றாலம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
என்னென்ன சிறப்புகள்?
மாடுகளுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் புல் வைக்கோல் போன்றவை கொடுப்பதில் மூலமாக உங்களுடைய முன்னோர்களின் சாபத்தை உங்களால் போக்க முடியும். தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதிலும் சிறப்பு உள்ளது.
சனியின் வாகனமான காகத்திற்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உணவளிக்கலாம் வெள்ளிக்கிழமை அமாவாசையும் சேர்ந்து வருவதால் மிகப் பெரிய மங்களகரமான காரியங்களை செய்வதற்கு ஏதுவாக அமையும். விரதம் இருப்பவர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீரைத் தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தீபம் போட்டு வர உங்களுடைய சங்கடங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
