பிக்பாஸ் வீட்டில் கிளம்பிய புது பிரச்சனை - தாடி பாலாஜி மனைவி பகீர் புகார்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் தாடி பாலாஜி பற்றி அவரது மனைவி நித்யா புகார் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.
ஏற்கனவே இருவருக்கும் இடையே விரிசல் இருந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் மோதல் முற்றியது. அந்த சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டாலும் தற்போது வரை இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். , நித்யா தன் மகள் போஷிகா உடன் உள்ளார்.
இதனிடையே இருவருக்குமிடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில் . கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மீது நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். நித்யாவின் இந்த குற்றச்சாட்டை பாலாஜி மறுத்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாடி பாலாஜி தன்னுடைய கேரக்டரை அவர் ரொம்பவே கேவலப்படுத்துவதாக நித்யா புகாரை கிளப்பியுள்ளார். இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது மகளுடன் வந்து பேசியுள்ள அவர் பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்கப்படுத்தி கொண்டிருக்கிறார். அவரை பற்றி பேசவேண்டிய கட்டாயம் இருக்கு. இனிமேலும் என்னை பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன்.
என்னுடைய மகள் போஷிகாவை அவர் மிகவும் அசிங்கமாக திட்டி இருக்கிறார் .அந்த ஆடியோ என்னிடம் இருக்கிறது. பாலாஜி குடிச்சிட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து அவர் அருகில் இருந்து கொண்டே சிரித்து மகிழ்ந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது.
இனிமேலும் அவர் இப்படி பேசினால் நான் யூடியூபில் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இதை நான் viewers பெறுவதற்காக செய்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். அப்படி எல்லாம் இல்லை. என் இமேஜை டேமேஜ் செய்தால் நான் கண்டிப்பாக விட மாட்டேன் என நித்யா கொந்தளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய போஷிகா, அப்பா நீங்க மீடியாவுக்கு ஆக மட்டும் இப்படி பண்ணாதிங்க. எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும். அந்த அளவிற்கு எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கிறது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.