மோசமா திட்டி மெசேஜ் பன்றாரு; மகளோடு பேசியதே இல்லை - தாடி பாலாஜி மனைவி நித்யா ஓபன்டாக்
தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா குற்றம்சாட்டியுள்ளார்.
நித்யா
தாடி பாலாஜி மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனிதனியே வசித்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சென்னையை அடுத்த மாதவரத்தில் நித்யா வசித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில், தாடி பாலாஜி மீது நான் போட்ட வழக்கில் அவர் செய்த தவறு உறுதியானதால், மகிளா நீதிமன்றம் 50லட்சம் தரவேண்டும் என்றும், மாதா மாதம் மகளுக்கு 50 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
குற்றச்சாட்டு
ஆனால், பாலாஜி இதுவரைக்கும் மகளுக்காக எந்த பணத்தையும் தரவில்லை. பாலாஜி தவறு செய்தார் என்பதை நிரூபிக்கத்தான் போராடினே தவிர பணத்திற்காக இல்லை. பாலாஜி மகளுடன் பேசலாம், வெளியில் அழைத்துப் போகலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மகளுக்கு என்று தனி செல்போன் கொடுத்து இருக்கிறேன்.
ஆனால், பாலாஜி ஒரு முறைக்கூட மகளுடன் பேசியது இல்லை, வெளியில் அழைத்துச் சென்றதும் இல்லை. இப்போதும் கூட என்னை மோசமாக திட்டி திட்டி மெசேஜ் அனுப்புவதால், நான் அவருடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.