துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகின - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

Ajith Kumar Vijay Tamil Cinema Varisu Thunivu
By Thahir Jan 11, 2023 02:08 AM GMT
Report

துணிவு, வாரிசு திரைப்படங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

வெளியானது துணிவு திரைப்படம் 

நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் இன்று வெளியானது.

thadhavu-and-varisu-movies-released

தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியானது. துணிவு திரைப்படம் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாரிசு திரைப்படம் வெளியானது

இதே போல் நடிகர் விஜய் நடிப்பில் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியானது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது.

thadhavu-and-varisu-movies-released

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.