நாட்டுக்கு பணியாற்ற பாஜகவில் இணைய உள்ளேன் - தாடி பாலாஜி மனைவி நித்யா பேட்டி

BJP
By Nandhini Jan 30, 2023 10:39 AM GMT
Report

நாட்டுக்கு பணியாற்ற பாஜகவில் இணைய உள்ளேன் என்று தாடி பாலாஜி மனைவி நித்யா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாடி பாலாஜி - மனைவி நித்யா

தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்து பிரபலமானவர்தான் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்சனைக் காரணமாக தாடி பாலாஜி தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.

தாடி பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என்று மனைவி நித்யா குற்றம் சாட்டினார். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக, தொகுப்பாளராக இருந்து வந்த தாடி பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 2வது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அதே சீசனில் நித்யாவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தது விஜய் டிவி. இந்நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி முடியும்போது பாலாஜி - நித்யா இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்பது போலவும் காட்டப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகும் இவர்கள் இடையே பிரச்சனை இருந்து கொண்டு தான் உள்ளது. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நித்யா கைது...?

சமீபத்தில் நித்யா மீது மாதவரம் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னையை அடுத்த மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்ஷன் 2வது குறுக்கு சாலையில் தாடி பாலாஜி மனைவி நித்யா வசித்து வகையில், இவருக்கும், எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

இதனையடுத்து, மீண்டும் ஏற்பட்ட பிரச்சினையில், எதிர்வீட்டு உரிமையாளரின் காரை நித்யா கற்களால் வீசி சேதப்படுத்தியதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா மீது புகார் கொடுத்தார். இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

பாஜகவில் இணைய உள்ளேன் - நித்யா பேட்டி

இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார் நித்யா. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் நித்யா பேசுகையில், ஒரு பெண்ணால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும். என்னதான் சிங்கிள் பெண்ணாக இருந்து போராடினாலும், நமக்கு பின்னாடி நிறைய தலைப்புகள் வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அரசியலில் ஜெயலலிதா அவர்களும், மம்தா பானர்ஜியும், தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும் அரசியலில் வந்து சாதனைப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். ஆதலால், நாட்டுக்கு சேவையாற்ற நான் பாஜகவில் இணைய உள்ளேன் என்றார்.