அந்த ஒரு பதிலுக்கு தான் நான் சின்னத்துரையை பார்க்க வந்தேன் - தாடி பாலாஜி நெகிழ்ச்சி!!
நாங்குநேரி பாதிக்கப்பட்ட மாணவனை நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் . c
சின்னத்துரை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (17). இவர் வள்ளியூரிலுள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர், சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சாதிய வன்மத்தால் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை தனது 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.
தாடி பாலாஜி நெகிழ்ச்சி
தற்போது பொதுத்தேர்வை எழுதிய அவர், 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் முக ஸ்டாலின் மாணவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதே போல, அமைச்சர் அன்பில் மகேஷும் வாழ்த்தினார். இந்த நிலையில், அவரை நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் சின்னதுரைக்கு பரிசுகளை வழங்கிய அவர், எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேள் செய்து கொடுக்கிறேன் என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி பேசும் போது, அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவரை சந்திக்க வந்ததாக குறிப்பிட்டு, என்னை போலவே என்னை தாக்கியவர்களுக்கு நன்றாக படித்து முன்னேறவேண்டும் என சின்னத்துரை கூறியதை சுட்டிக்காட்டி பாராட்டினார்.