டேவிட் வார்னர் திடீர் விலகலுக்கு என்ன காரணம்? வெளியான தகவல்- சோகத்தில் ரசிகர்கள்...!
டெஸ்ட் தொடரிலிருந்து டேவிட் வார்னர் திடீரென விலகலுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை தொடங்கி நிறைவடைந்தது. இப்போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், குரூப் 1 அரையிறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியுடன் இணைந்ததால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 2-வது அணியாக இப்போட்டியிலிருந்து வெளியேறியது.
டேவிட் வார்னர் ஓய்வு
இப்போட்டி முடிந்ததும், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்தார். ஆஷஸ் தொடருக்குப் பிறகு 1 வருடத்திற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று டேவிட் வார்னர் உறுதிப்படுத்தினார். 2023ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் 2024-T20 உலகக் கோப்பையில் விளையாடப் போவதாக வார்னர் தெரிவித்திருந்தார்.
டேவிட் வார்னர் திடீர் விலகல்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரிலிருந்து டேவிட் வார்னர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பந்து வார்னரின் தலையில் பலமாக தாக்கியது.
இதனால் நிலைகுலைந்த வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சிலிருந்து விலகினார். இதனையடுத்து, டெஸ்ட் தொடரிலிருந்து விலகி உள்ள டேவிட் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.