'' யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யாரறிவார்'' : டெஸ்டில் தோல்வியை சந்திக்காத கேப்டனாக தொடரும் ரஹானே

Rahane INDvsNZTestSeries
By Irumporai Nov 29, 2021 01:01 PM GMT
Report

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது டிக்ளேர் செய்தது. இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது. 

இன்றைய போட்டியில், நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழந்தனர், இந்திய அணியின் கைவசம் 10 ஓவர்களுக்கு மேல் இருந்ததால் இந்திய அணி இந்த போட்டியில்  வெற்றி பெறும் என்றே கருதப்பட்டது.

ஆனால், போதிய வெளிச்சம் இல்லாமல் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் முதல் போட்டி டிராவில் முடிந்தாலும் , இது வரை நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியே இல்லாத கேப்டனாக தொடர்கிறார் ரஹானே.

இதுவரை 6 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ரஹானே ,4 போட்டிகளில் வெற்றியினையும், 2 போட்டிகளில் டிராவையும் கண்டுள்ளார்.  மேலும் 3 ஒரு நாள் போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக இருந்து, மூன்றிலும் வென்று அதிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.