டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு - பாதாளத்திற்கு சென்ற விராட் கோலி!
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி என்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஃபாவத் அலாம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 124 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் 34 வது இடத்தில் இருந்த அவர் 21வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
அதே போல ஷஹீன் ஷா அப்ரிடி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி போட்டியின் முடிவில் 10 விக்கெட்டுகளை ( 10 விக்கெட் ஹால் ) கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு துணை நின்றார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஒரு மட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி தற்போது பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புள்ளி பட்டியலில் 18வது இடத்தில் அவர் உள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு டெஸ்ட் போட்டியிலும் மொத்தமாக பதினெட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதையும் இவர் கைப்பற்றி உள்ளார். பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபநாசம் 75 மற்றும் 33 ரன்கள் குவித்து அசத்திய காரணத்தினால் எழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல முஹம்மது ரிஸ்வான் முப்பத்தி ஒன்னு மற்றும் 10 ரன்கள் குவித்த நிலையில் டாப் 20 இடத்திற்கு முன்னேறியுள்ளார். நோமான் அலி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய காரணத்தினால் நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்து 44 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர் வீரர் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தர வரிசையில், ஆறு இடங்கள் முன்னேறி 37 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஜேடன் சீல்ஸ் இந்த டெஸ்டில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய காரணத்தினால் 54 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.