கபில்தேவ், தோனியைப் போல. லார்ட்ஸ் மைதானம் நம் வசம் வருமா?

indian cricket London lords 18 test
By Irumporai Aug 10, 2021 10:13 PM GMT
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 12-ந் தேதி உலகப்புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் உலகின் மெக்கா என்று வர்ணிக்கபடும் இந்த மைதானத்தில் விளையாடுவது கிரிக்கெட் போட்டியில் ஆடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்நாள் கனவு என்றே கூறலாம்.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதனத்தில் இந்திய அணி 1932 முதல் விளையாடிவருகிறது ,இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது

 இந்த போட்டிகளில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 1932ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

லார்ட்ஸ் மைதானத்தில்  கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி . 1986ம் ஆண்டு இங்கிலாந்து அணியை திலீப் வெங்கர்சகாரின் சிறப்பான பேட்டிங் மற்றும் கபில்தேவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தது.

கபில்தேவ், தோனியைப் போல. லார்ட்ஸ் மைதானம்  நம் வசம் வருமா? | Test Indian Cricket London Lords 18 Test

அந்த வெற்றிக்கு பிறகு சுமார் 28 ஆண்டுகாலமாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறாமலே இருந்தது. அந்த சோகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் படை கடந்த 2014ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தது.

கபில்தேவ், தோனியைப் போல. லார்ட்ஸ் மைதானம்  நம் வசம் வருமா? | Test Indian Cricket London Lords 18 Test

அந்த போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இதுவரை மேற்கண்ட இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

இந்திய அணி இதுவரை இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் லார்ட்ஸ் மைதானத்தில் 3 முறை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

உலககோப்பையை வென்ற இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான கபில்தேவும், எம்.எஸ்.தோனியும் மட்டுமே இதுவரை இந்தியாவிற்காக லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்  கடந்த முறை லார்ட்சில் தோல்வியை தழுவிய கோலியின் படை வெற்றி பெற்று வரலாறு படைத்து சரித்திரத்தின் பக்கத்தில் இடம்பிடிக்குமா அதற்கான பதிலை இனி வரும் காலங்கள் தான் கூறும்.