சென்னைக்கு அடித்த ஜாக்பாட்; விரையும் டெஸ்லா - ஸ்கெட்ச் போடும் எலான் மஸ்க்!

Chennai Elon Musk Tesla
By Sumathi Apr 04, 2024 07:53 AM GMT
Report

தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

டெஸ்லா நிறுவனம்

இந்தியா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

tesla

இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அதன்படி 2-3 மில்லியன் டாலருக்கு வாகனம், செமி கான்டெக்ட்டர் என்று பல்வேறு உற்பத்திகளை செய்யவுள்ளது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் தமிழ்நாட்டை நோக்கி உருவாகுவதற்கான நிலை அமைந்துள்ளது.

டெஸ்லாவின் தலைமை பொறுப்பில் தமிழர் ; குவியும் பாராட்டு

டெஸ்லாவின் தலைமை பொறுப்பில் தமிழர் ; குவியும் பாராட்டு

தமிழ்நாட்டில் முதலீடு 

தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளையும் அதன் சலுகைகளையும் வெளியிட்டது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

chennai

விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையை இந்தியாவின் எதாவது ஒரு கடலோர சிட்டியில் அமைக்க டெஸ்லா ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி, சென்னை, குஜராத் ஆகியவை டெஸ்லாவின் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.