இன பாகுபாடு சர்ச்சையில் சிக்கிய டெஸ்லா நிறுவனம் : காரணம் என்ன?

tesla factorystatement elecriccars
By Irumporai Feb 11, 2022 09:49 AM GMT
Report

எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் பிரபல கார் நிறுவனமான  டெஸ்லா நிறுவனத்தில் தொழிற்சாலையில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித்துறை என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்லா நிறுவனத்தின் FREMONT என்ற தொழிற்சாலையில் இன ரீதியில் பிரிவினை காட்டப்படுவதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கறுப்பினத்தவர் அல்லாத தொழிலாளர்களுக்கு ஆலையில் வேலை ஒதுக்கீடு, ஒழுக்கம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகிவயற்றில் அடிக்கடி முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன பாகுபாடு சர்ச்சையில் சிக்கிய  டெஸ்லா நிறுவனம் : காரணம் என்ன? | Tesla Of Racial Segregation At Factory Statement

தொழிற்சாலையில் உள்ள கறுப்பினத் தொழிலாளர்கள் தொடர்ந்து மிகவும் இன அவதூறுகளுக்கு ஆளாவதாகவும், இனவெறி நகைச்சுவைகளுக்கு உடப்டுத்தப்படுவதாகவும் கலிஃபோர்னியா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இனப்பாகுபாடு குற்றசாட்டு குறித்து தனது இணையதளத்தில் டெஸ்லா விளக்கமளித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான மற்றும் நியாயமற்ற வழக்கு என்றும் டெஸ்லா கூறியுள்ளது