வரியை குறைங்க பாஸ் காரை இறக்கிடலாம் : மதன் கெளரிக்கு விளக்கம் கொடுத்த எலன் மாஸ்க்!

india madangowri tesla ellonmusk
By Irumporai Jul 24, 2021 12:38 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா" என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பலர் தங்களது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கும் நிலை உள்ளது.

இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த யூடியூபர் மதன்கொளரி இந்தியாவில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதாவது உலகிலேயே அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா என்றும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய அரசிற்கு டெஸ்லா நிறுவனம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.