இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது - அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்.
மும்பைத் தாக்குதல்
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர், மும்பையின் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். அந்த நாளை இந்தியர்கள் ஒருவராலும் மறக்க முடியாது. இத்தாக்குதலில் போலீசார், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். இத்தாக்குலில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதனையடுத்து, தீவிரவாதி அஜ்மல் கசாப் புனாவில் உள்ள எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
இந்நிலையில், கடந்த 20ம் தேதி மும்பை நகர காவல்துறை கட்டுப்பாடு பாகிஸ்தானிலிருந்து வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அந்த குறுஞ்செய்தியில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் 6 பேர் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர் என்று அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த குறுஞ்செய்தியால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த குறுஞ்செய்தி தொடர்பாக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மும்முரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, மும்பை முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது
இந்நிலையில், இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு வர புறப்பட்டபோது ரஷ்ய உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என்று ரஷ்ய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.