இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை - மும்பையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பைத் தாக்குதல்
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர், மும்பையின் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். அந்த நாளை இந்தியர்கள் ஒருவராலும் மறக்க முடியாது.
இத்தாக்குதலில் போலீசார், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.
இத்தாக்குலில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதனையடுத்து, தீவிரவாதி அஜ்மல் கசாப் புனாவில் உள்ள எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
இந்நிலையில், மும்பை நகர காவல்துறை கட்டுப்பாடு பாகிஸ்தானிலிருந்து வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அந்த குறுஞ்செய்தியில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவில் 6 பேர் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர் என்று அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த குறுஞ்செய்தி தொடர்பாக காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மும்முரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, மும்பை முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.