பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி : அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Joe Biden BJP Narendra Modi
By Irumporai Jun 23, 2023 04:53 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன்-அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்காவில் மோடி

பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் பைடனும்-பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன. இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடியும்-அமெரிக்க அதிபர் பைடனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி : அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு | Terrorism Is The Enemy Of Humanity Pm Modi America

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான முடிவுகள் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது என்றார். இது புதிய பாதையையும்,புதிய ஆற்றலையும் தந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், தற்போதைய சூழலில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, அது விரைவில் 3-வது இடத்திற்கு இந்தியா வளரும்.

பயங்கரவாதம் எதிரி

இந்தியா வளரும் போது உலகின் எல்லா நாடுகளும் வளரும் என்று கூறினார். பயங்கரவாதம் தான் மனிதகுலத்தின் எதிரி, அதனை நாம் கவனமாகக் கையாளவேண்டும். பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து சக்திகளையும் முறியடிக்கவேண்டும் என்று கூறிய மோடி, பயங்கரவாதத்தை அடக்க இந்தியா-அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனவும் கூறினார்.

இந்தியா-அமெரிக்கா உறவு பற்றி இந்த நூற்றாண்டின் சிறந்த கூட்டாண்மையை எங்கள் இரு நாடுகளின் உறவு வரையறுக்கிறது. ஒரு பெரிய நோக்கத்திற்காக இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்குகின்றன, மேலும் எங்கள் ஒத்துழைப்பின் நோக்கம் முடிவற்றது என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார். அமெரிக்க காங்கிரஸில் பிரதமர் மோடியின் உரைக்கு அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர்.