பட்டாசு வெடி சத்தத்தை கண்டு பயந்து மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்ட பூனை பத்திரமாக மீட்பு
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று (நவம்பர் 04) கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் புத்தாடை அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இதையடுத்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பட்டாசுகள் வெடித்து வந்தனர்.
பட்டாசு வெடிசத்ததை கண்டு பயந்து போன பூனை ஒன்று உயரமான மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டது.
இதையடுத்து அந்த பூனை மரத்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்து வந்தது. இதை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
மேலும் இதே போன்று நேற்று பட்டாசு வெடிப்பதை கண்டு மிரண்டு போன பூனை ஒன்று உயரமான கட்டிடத்தில் சிக்கி கொண்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.