பயங்கரகாயம் ஐபிஎல் தொடரில் விலகிய ஆர்.சி.பி வீரர் : அதிர்ச்சியில் ரசிகர்கள்
தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் வீரர் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர்
தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் கடந்த ஏப்ரல் 2 - ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வேகபந்து வீச்சாளர் ரீசே டோப்லிக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார்அவருக்கு பதிலாக லெவன்சில் டேவிட் வில்லி மாற்றப்பட்டார்.
ரசிகர்கள் சோகம்
மேலும், இப்போது காயம் காரனமாக ரீசே டோப்லி தனது சொந்த நாட்டிற்க்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரை பெங்களூர் அணி 1.9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஏற்கனவே பெங்களூர் அணியில் இருந்து வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் விலகியுள்ள நிலையில், தற்போது 3-வது வீரராக ரீசே டோப்லி விலகியுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.