தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் பலி - பலர் படுகாயம்...!
தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
நேற்று தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே ஒரு மருத்துவமனை அருகே எரிபொருள் டேங்கர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் பலத்த தீக்காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
