கம்போடியாவில் பயங்கர தீ விபத்து... - 10 பேர் பலி.. - பலர் படுகாயம் - அதிர்ச்சி சம்பவம்...!

Viral Video Thailand Fire Accident
By Nandhini Dec 29, 2022 11:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கம்போடியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து - 10 பேர் பலி

தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கம்போடிய ஹோட்டல்-சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று இரவு Poipetல் உள்ள Grand Diamond City ஹோட்டல் - கேசினோவில் தீ விபத்து ஏற்பட்டது.

பல மணி நேரம் ஹோட்டலில் தீ பரவியதால், ஹோட்டலுக்குள் இருந்த சுமார் 50 பேர் தீயில் சிக்கினர். இன்று அதிகாலை 1.30 மணி நிலவரப்படி 53 நபர்கள் தீயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒருவர் உயிர் தப்பிப்பதற்காக 5வது மாடியிலிருந்து குதிப்பதை பார்க்க முடிகிறது.      

terrible-fire-cambodia-10-people-death