தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து… மாடியில் இருந்து குதித்த மக்கள் - 8 பேர் பலி

Telangana Fire Death
By Thahir Sep 13, 2022 06:20 AM GMT
Report

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தங்கும் விடுதியில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் 4 அடுக்குகளை கொண்ட தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது தங்கும் விடுதியில் 25 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தரைத்தளத்தில் இருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவி அடுக்குமாடி விடுதி அறைகள் வரை சென்றது. அறையில் தங்கியிருந்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினர். தீ விபத்தினால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Fire Accident

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் விடுதியில் இருந்த அனைவரையும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்டனர்.விடுதியில் தங்கியிரு்ந்த சிலர் மாடியில் இருந்தும் குதித்து வெளியேறும் அதிர்ச்சி வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

நிவாரணம் அறிவிப்பு 

தீ விபத்தின் போது தங்கும் விடுதியில் இருந்த தீ அணைப்பு சாதனங்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும்,  காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது