Wednesday, Jul 9, 2025

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 157 பேர் பலி, 375க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Earthquake Nepal Death World
By Jiyath 2 years ago
Report

நேபாளத்தில் ஏற்பட்டதில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 375க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 157 பேர் பலி, 375க்கும் மேற்பட்டோர் படுகாயம்! | Terrible Earthquake In Nepal 157 Death

நேபாளத்தின் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "நிலநடுக்கத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

375க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அரசு தரப்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாள ராணுவம், காவல், ஆயுதப்படையை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலவசமாக சிகிச்சை

படுகாயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் பிரசண்டா பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 157 பேர் பலி, 375க்கும் மேற்பட்டோர் படுகாயம்! | Terrible Earthquake In Nepal 157 Death

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.