அர்ஜெண்டினாவில் பயங்கர நிலநடுக்கம் - அலறி அடித்து ஓடிய மக்கள்
அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து மக்கள் அலறியடித்து தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
அதிகாலை பயங்கர நிலநடுக்கம்
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் கார்போடா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கி கொண்டிருந்த பொதுமக்கள அலறி அடித்தப்படி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் ஓடினர்.
மேலும் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.