அமெரிக்காவில் பயங்கர பனிப்புயல் - 32 பேர் பலி - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

United States of America
By Nandhini Dec 26, 2022 06:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 32 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பனிப்புயல் - 32 பேர் பலி

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக, அந்நாட்டின் பெரும்பகுதியில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான குளிரை சகித்து வருகின்றனர்.

பனிப்புயல் காரணமாக நூறாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்பொழிவால், பயங்கரமான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடத்திற்காக போட்டுவைத்த திட்டங்களை இந்த புயல் சீர்குலைத்து விட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த பனிப்புயலுக்கு 32 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனிப்புயலில் சில வாகன ஓட்டிகள் தங்கள் கார்களுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதலால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

terrible-blizzard-america-32-dead