குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 : யாருக்கெல்லாம் கிடையாது - வெளியான முக்கியதகவல்
குடும்ப தலைவைகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ 1000 வழங்குவது குறித்து வரக்கூடிய தமிழக பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகின்றது.
மாதம் ரூ 1000
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான பல்வேறு நிபந்தனைகள் குறித்து தமிழ்நாடு அரசு வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இது குறித்த தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திட்டம் கேட்டுள்ளது.
யாருக்கு 1000 ரூபாய்
நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் , கைம்பெண்கள் , ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைத்தார்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கி வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது