கல்வீச்சு.. பதற்றம் பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேரும் கட்சிகள் !
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளை அடைக்குமாறு கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதேபோல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் கலவர்ம் நடந்த பகுதியில் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டரிந்தார். பின்னர் வர்த்தகர்களுக்கு எதிரான பாஜகவினர் செயலை கண்டிப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், கலவர ஸ்பெஷலிஸ்டுகளை" ஒற்றுமையால் முறியடிப்போம் தெரிவித்துள்ளார்.
ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை. (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2021
மேலும், டவுன்ஹால் பகுதிக்கு நேரில் சென்று வர்த்தகர்களை சந்தித்து சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை கண்டிப்பதாக தெரிவித்தார். பாஜகவினர் கல்லெறிந்த கடைக்கு சென்று ஆதரவு தெரிவித்ததோடு அந்த கடையில் தனக்கு ஒரு ஜோடி செருப்பும் வாங்கிக் கொண்டார்.
உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்ததையொட்டி டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியில் இஸ்லாமியர்களின் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 31, 2021
இதனை கண்டித்து தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் சமூக வலைத்தளங்களில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
(1/3) pic.twitter.com/850kBCTwbE