டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு

Delhi
By Fathima Jul 22, 2026 05:27 AM GMT
Report

டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீட்தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போலிசார் விரட்டியடித்து வருகின்றனர், இவர்களின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

நிலையை கட்டுக்குள் கொண்டு வர மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.