காய்ச்சல் வந்தவுடன் பதற்றமா? இந்த கஷாயம் மட்டும் போதும்
காய்ச்சல் வந்தவுடனே பதறிப்போய் மருத்துவமனை செல்பவர்கள் தான் அதிகம், ஆனால் அது எந்த வகையான காய்ச்சல், எதனால் காய்ச்சல் வந்தது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நமது உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் போது காய்ச்சல் வரும். காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல.
அது ஒரு அறிகுறி. பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல்.
சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். இந்நிலையில் அனைத்து வகையான காய்ச்சலுக்கும் மருந்தாகும் கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம்.