பண மோசடியில் சிக்கிய முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை...!
பண மோசடியில் சிக்கிய முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வரி ஏய்ப்பு புகார்
முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (54). இவர் ஜெர்மனியின் முன்னாள் டென்னிஸ் வீரரான இவர் 3 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
லண்டனில் வசித்து வந்த போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பிறகு, கடந்த 2017ம் ஆண்டு, ஒரு தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கி அதை திருப்பி செலுத்ததால் தன்னை திவாலானவராக அறிவித்தார் பெக்கர்.
மேலும், பெக்கர் தன் வங்கி கணக்கிலிருந்து பலருக்கு நிறைய பணம் அனுப்பினார். அவரது சொத்துகளை மறைத்து ஏமாற்றினார். இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது.
போரிஸ் பெக்கர் விடுதலை
இதனையடுத்து லண்டன் கோர்ட் போரிஸ் பெக்கருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. திவால் வழக்கு என்பதால் தண்டனை காலம் குறைக்கப்பட்டு, சில மாதங்கள் பெக்கர் சிறையில் இருந்தார்.
இந்நிலையில், போரிஸ் பெக்கர் நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையானதும் அவர் தனது தாய்நாடான ஜெர்மனுக்கு சென்றுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.