விம்பிள்டன் டென்னிஸ் - பட்டத்தை வென்ற ஆஷ்லே பார்டி! ரசிகர்கள் உற்சாகம்

win tennis ashleigh bardy
By Anupriyamkumaresan Jul 11, 2021 02:49 AM GMT
Report

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் 'நம்பர்-1' ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி - செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர்.

விம்பிள்டன் டென்னிஸ் - பட்டத்தை வென்ற ஆஷ்லே பார்டி! ரசிகர்கள் உற்சாகம் | Tennis Ashleigh Bardy Win The Match

மிகவும் பரபரப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது. ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் ஆஷ்லே பார்டி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆஷ்லே பார்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை ஆஷ்லே பார்டி வென்றிருந்தார்.