பிளீச்சிங் பவுடரை தெரியாமல் சாப்பிட்ட குழந்தை! உயிரை காப்பாற்ற பெற்றோர்கள் கண்ணீர் போராட்டம்!
செங்கோட்டை அருகே பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டதால் உடல் நலம் பாதித்து எலும்பும் தோலுமாக மாறிய 5 வயது குழந்தையை காப்பாற்ற பெற்றோர்கள் போராடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான சீதா ராஜ் - பிரேமா தம்பதியினருக்கு 5 வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை கடந்த 3 மாதங்கலுக்கு முன்பு பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வயிற்று வலி, நெஞ்சு எரிச்சலால் தவித்து வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை வயிற்று புண்ணால் எந்த உணவும் உண்ண முடியாமல், அவதிப்பட்டு உடல் எடை குறைந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை செல்ல வேண்டும் என்ற நிலையில், குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை காப்பாற்ற தத்தளித்து வருகின்றனர்.