தென்காசி கோட்டாச்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பழனி நாடார் வேட்புமனு தாக்கல்

tamilnadu congress palani nadar tenkasi
By Jon Mar 18, 2021 01:36 PM GMT
Report

தென்காசியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் வேட்புமனு தாக்கல். தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடார், திமுக, மதிமுக கூட்டணி நிர்வாகிகளுடன் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர் ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பழனி நாடார் தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த முறை இதே தொகுதியில் நான் போட்டியிட்டேன். பாசிச மோடி அரசால் வெற்றி பெற்றதாக என்னை தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன். தொகுதிக்கு தேவையான அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், மதிமுக மாவட்டச் செயலாளர் திமுக ராஜேந்திரன், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், மாவட்ட பொதுச்செயலாளர் ஏஜிஎம் கணேசன், திமுக நகர செயலாளர் சாதிர், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.