2ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விசிக கவுன்சிலர்
தென்காசியில் 2ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விசிக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15 வது வார்டு உறுப்பினரான வீராசாமி என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி தனிமையில் தவறுதலாக நடந்து உள்ளார்.
மேலும் இதுகுறித்து நீ பெற்றோர்களிடம் கூறினால் அவர்களை கொன்றுவிடுவேன் என சிறுகுழந்தையிடம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது மருத்துவர் ஸ்கேன் எடுத்து வர கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்து குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குழந்தையிடம் அவர்கள் கேட்ட போது நடந்த உண்மை சம்பவத்தை கூறி அச்சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகார் பற்றி தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கட்சி பிரமுகர் தலைமறைவானார்.
அவரை தேடிவந்த போலீசார் வயலில் மறைந்திருந்த போது அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை குழந்தையிடம் தகாத முறையில் நடந்து ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.சிறுகுழந்தை என்று கூட பாராமல் ஒரு கட்சி பிரமுகர் இது போன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.