நீதிமன்ற உத்தரவை அடுத்து தென்காசி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை..!
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடந்த வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டார்.
இந்நிலையில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது.
எனவே பதிவான வாக்குகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது.
மீண்டும் வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில் இன்று (13.07.2023) காலை 10 மணிக்கு தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மறு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டு உள்ளார். மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது.