முறைகேடு புகார்.., சென்னை நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து
சென்னையில் நடைபாதை அமைக்கும் பணிகளுக்காக ரூ.284 கோடி மதிப்பில் விடப்பட்ட 35 டெண்டர்களை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
டெண்டர்கள் ரத்து
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த டெண்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நடைபாதை திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் விதிமுறைகள் அமைக்கப்பட்டதாக புகார் எழுந்ததால் ரத்து செய்யப்பட்டது.
மேலும், ஒரு மீட்டர் நடைபாதை அமைப்பதற்கான செலவு வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நடைபாதை திட்டத்தின் விரிவான அறிக்கை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, திருத்தங்களுடன் புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan