தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் ஆய்வு டெண்டர் ரத்து - தமிழ்நாடு அரசு

Tamil nadu Governor of Tamil Nadu
By Vinoja Jun 26, 2026 10:20 AM GMT
Report

தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

சென்னை தவிர்ந்த 12 மாநகராட்சிகளில் திடக்கழிவுகளைச் சேகரித்து எடுத்துச் செல்லும் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம் கடந்த 20ஆம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் ஆய்வு டெண்டர் ரத்து - தமிழ்நாடு அரசு | Tender For Privatization Of Sanitation Cancelled

இந்தத் திட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் தூய்மைப் பணியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், தனியார் பங்களிப்பு தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுக்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.