பத்தாண்டுகளாக சிறையில் வாடும் கைதிகள் : விடுதலை எப்போது ? குடும்பத்தினர் கதறல்
பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் தமிழக சிறைகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான கைதிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தண்டனை கிடைக்கப் பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர் .
இந்த நிலையில் இன்று தமிழக அரசு நன்னடத்தை காரணமாகவும் அண்ணா பிறந்தநாளையொட்டி பல்வேறு சிறைகளில் உள்ள ஏராளமான கைதிகளை விடுதலை செய்தது இந்த நிலையில் கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்தின்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர்