தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மீண்டும் தற்காலிக கொரோனா வார்டு அமைக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மீண்டும் தற்காலிக கொரோனா வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா 2-வது அலை தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.
தினந்தோரும் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக வார்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு இருந்தது.
அங்கு தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது மீண்டும் அந்த பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வார்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அங்கு நோயாளிகளுக்காக அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.