5 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 5 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஒருவார காலமாக தமிழத்தில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் அனுமதியில்லை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தற்போது கூடுதலாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,
பொங்கல் பண்டிகை, தைப்பூசம் வருவதால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதை கருத்தில் கொண்டு ஜனவரி 14. ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.