டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கோவில்களுக்கு இல்லை: அண்ணாமலை கேள்வி
தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை:
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர், ஆனால் தமிழக அரசோ அதனைப் பற்றி கவலைப்படாமல் நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அரசியல் செய்து வருவதாக கூறினார்.
அதே போல் ,தற்போது பள்ளிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளி செல்ல அனுதி கொடுக்கும் தமிழக அரசு ஏன் தடுப்பூசி செலுத்தி கொண்டவ்ர்கள்ஐ கோவிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது எனக் கூறினார்.மேலும் டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன்கோவில்களுக்கு கொடுக்கப்படுவதுஇல்லை எனக் கூறினார்.