கோயில்கள் பெயரில் போலி இணையதளங்கள் முடக்கம் : நீதி மன்றம் அதிரடி உத்தரவு

By Irumporai Jan 31, 2023 12:52 PM GMT
Report

தமிழ்நாட்டில் கோயில்களின் போலி இணையதளங்களை முடக்க 12 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயர்நீதிமன்ற கிளை.  

வழிகாட்டு நெறிமுறைகள்

கோயில்கள் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோயில்களின் போலி இணையதளங்களை முடக்க 12 வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.

போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி இணையதளங்கள் மூலம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.

தகவல் தொழிநுட்பத்துறை மூலம் கோயில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் மட்டும் பூஜைகள், நன்கொடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி இணையத்தளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலரை நியமித்து தனி தொலைபேசி எண் உருவாக்க வேண்டும்

கோயில்கள் பெயரில் போலி இணையதளங்கள் முடக்கம் : நீதி மன்றம் அதிரடி உத்தரவு | Temples Highcourt Branch Order

சைபர் க்ரைம் போலீசாரும் போலி இணையதள புகார்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமணம் கட்டணம், நன்கொடை போன்றவற்றிக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும், கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டும்.

மேலும், கோயில்களில் நடைபெறும் செயல்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முறைப்படுத்த வேண்டும் என்றும் கோயிலுனுள் நடைபெறும் செயல்பாடுகளை கண்காணித்து சட்ட விரோதங்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.