கோவிலில் 108 கிடாய் வெட்டி விருந்து வைத்த சீமான்: எதற்காக?
தன்னுடைய மகன் பிரபாகரனின் காதணி விழா மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்காக 108 கிடாய் வெட்டி நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளரான சீமான் விருந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் இருக்கும் வீரகாளியம்மன் கோவிலில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்ள கிடாய் விருந்து நடந்து முடிந்துள்ளது.
அப்போது சீமான் கூறுகையில், குலதெய்வ வழிபாடு மற்றும் எனது மகனின் காதணி விழாவிற்காக இங்கு வந்தோம், 108 கிடாய் வெட்டி விருந்து வைத்த மகிழ்ச்சியில் நிற்கிறேன். ஒவ்வொரு முறையில் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே ஆகிறான், விவசாயிகள் கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நெல் வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட பணக்காரராகி இருக்கிறார்கள்.
அடிப்படையில் இருக்கும் பிரச்சனையை மாற்ற வேண்டும், உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பிரதமரின் அறிவிப்புகள் எல்லாம் வெற்று அறிவிப்பு தான், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெற்றி நடைபோடும் என தெரிவித்துள்ளார்.