வீடு தேடி கோயில் பிரசாதம் உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டம் : அமைச்சர் சேகர்பாபு

P. K. Sekar Babu
By Irumporai May 19, 2023 07:03 AM GMT
Report

கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் உலகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதங்களை இந்தியா முழுவதும் பக்தர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

வீடு தேடி கோயில் பிரசாதம் உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டம் : அமைச்சர் சேகர்பாபு | Temple Prasadham Sent To Home Scheme

  48 கோயில்களில் திட்டம்

முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் படி பிரசாதத்தை அனுப்புவதற்கு கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் பிரசாதங்களை அனுப்பும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்