கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்ற கோவில் நிர்வாகம் - காரணம் என்ன?

vaccination temple compulsory maduraitemple
By Irumporai Dec 12, 2021 07:50 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்து இருந்தது.

இந்நிலையில், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் :

கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021-ந் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்ற கோவில் நிர்வாகம் - காரணம் என்ன? | Temple Notice Of Vaccination Compulsory

மேலும், பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.