ஊரடங்கை மீறி கோயில் திருவிழாவில் நடந்த விளையாட்டுப் போட்டி

Tuticorin Temple function
By Petchi Avudaiappan Jun 07, 2021 02:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி கோயில் திருவிழாவில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் திருவிழாவை முன்னிட்டு இரவில் கபடி போட்டி, பகலில் கயிறும் இழுக்கும் போட்டிகள் என விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைதலாக பரவி வருகிறது.